அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

70பார்த்தது
இந்து மத புராணங்களில் முதலிடம் வசிக்கும் மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான பாஞ்சாலி உள்ளது. இந்த பாஞ்சாலியை, ஸ்ரீ திரௌபதி அம்மனாக ஐதீகமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது,
இந்நிலையில்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்க்குப்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 15 ஆண்டுக்கு பிறகு தீ மிதி திருவிழா கடந்த மாதம்
மே - 19-ம் தேதி கொடியேற்றி, குடி அழைப்பு காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பாரத சொற்பொழிவு, திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வோடு, வழிபாடும் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற்றது கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள தீ குண்டத்தில், வேண்டுதல் வைத்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்,
தொடர்ந்து அம்மனுக்கு மகா தீப ஆராதனை நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இந்த தீமிதிபதால்
வேண்டும் வரம் கிடைக்கும் என்றும், பில்லி, சூனியம், ஏவல், உடல் கோளாறு, செய்வினை போன்றவை அகலும் என்ற ஐதீகம் இருந்து வருகிறது, இந்த நிகழ்வில்
பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி