வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி போலீசார் விசாரணை

85பார்த்தது
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி போலீசார் விசாரணை
பெரம்பலூர், துறைமங்கலம்
கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர்,
விமலா -64,
அரசு உதவி பெறும் பள்ளியில் ஓய்வு பெற்ற அலுவலரான இவர்
சென்னையில் உள்ள தனது உறவினர்களின் திருமணத்திற்காக சென்றுள்ளார்.
இவர்களது வீட்டில் நடேசன் நித்தியானந்தம் மனைவி சரண்யா -34, (ம) வசந்த் ஆகிய இருவரும் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். சரண்யா மதுரையில் தனது உறவினர்களின் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். வசந்த் மட்டும் மாடியில் உள்ள ரூமில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இந்நிலையில் வசந்த் தனது ரூமில் இருந்து வெளியே வரும்பொழுது ரூமின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டுள்ளது, உடன் அருகில் இருந்தவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து அவர்கள் வந்து தாழ்ப்பாளை திறந்து கீழே வந்து பார்க்கும் பொழுது விமலா வீட்டில் கதவின் பூட்டை உடைத்து ரூமில் இருந்த பீரோ, டேபிள், கபோர்ட் ஆகியவற்றின் பூட்டுக்களை உடைத்து பொருட்களை களைத்து திருட முயற்சி செய்தது வெளிய வந்துள்ளது.
இது குறித்து
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் விமலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்த போது பொருட்கள் எதுவும் வீட்டில் வைக்கவில்லை, பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என கூறியுள்ளார்.
மேலும்
இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

டேக்ஸ் :