மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

78பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம்
ஊரகப்பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழத்தில் பொதுமக்கள் அன்றாடம் அணுகக்கூடிய அரசுத்துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து சிறப்பு முகாம் நடத்தி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் ”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டம் நகரப் பகுதிகளில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது அதனை தொடர்ந்து இன்று, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஊரகப்பகுதி மக்களுக்கான ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரலை பார்வையிட்ட பின், முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், முகாம்களின் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் முறை, வழங்கப்படும் சேவைகள் குறித்தும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அலுவலர்கள் துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :