பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக போக்குவரத்து (ம) மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதில் கீழமாத்தூர் ஊராட்சிக்கு செல்லும்போது அந்த ஊராட்சிக்குட்பட்ட சடைக்கண்பட்டி கிராமத்திற்கு காவிரி குடிநீர் வரவில்லை என அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களிடம் உங்களது கோரிக்கை இன்றே நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த அமைச்சர் உடனடியாக அதற்கான பணிகளை செய்து முடிக்குமாறு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனை அடுத்து போர்க்கால அடிப்படையில் இரண்டே மணி நேரத்தில் அடைக்கம்பட்டி கிராம பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
கோரிக்கை வைக்கப்பட்ட உடனேயே தங்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெற்ற மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள் அமைச்சிருக்கு மகிழ்ச்சிபொங்க தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.