பள்ளி மேலாண்மை குழு சார்பில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக மாற்றி தர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின், பள்ளி மேலாண்மை குழு சார்பில் அதன் மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தினர் இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், பெரம்பலூரில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இங்கு பத்தாம் வகுப்பு படித்த பின் மாணவிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்ப படிக்க, மற்ற பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது, ஆகவே மாணவர்கள் நலன் கருதி தொடர்ந்து தங்கள் படிப்பை அதே பள்ளியில் படிக்கும் வகையில், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பள்ளியாக மாற்றம் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கான மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியிருப்பதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் மாணவிகளின் படிப்பு பாதியிலேயே தடைபட கூடிய சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
பேட்டி: அனுசியா பள்ளி மேலாண்மை குழு. பெரம்பலூர்.