பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தையல் இயந்திரம் கேட்டு கோரிக்கை வைத்த உயரம் குறைந்த செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி காசியம்மாள் - 32 என்ற பெண் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினார். கோரிக்கை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கற்பகம் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 30 நிமிடத்தில் அவர் இயக்கும் வகையில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரத்தை வழங்கினார்.