மாரத்தான் ஓட்டப்போட்டியினை ஆட்சியர் துவக்கி வைத்தார்

173பார்த்தது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்
நடத்தப்பட்ட அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம், இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர். பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

இந்த மாரத்தான் போட்டிகள் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி. மீ தூரமும், பெண்களுக்கு 5 கி. மீ தூரமும் நடத்தப்பட்டது. மேலும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி. மீ தூரமும், பெண்களுக்கு 5 கி. மீ தூரமும் மாரத்தான் ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து துவங்கி 5 கி. மீ. தூரம் கலந்துகொள்ளும் பெண்களுக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலும், 8 கி. மீ தூரம் உள்ள ஆண்களுக்கு தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரி வரையிலும், 10 கி. மீ தூரம் உள்ள ஆண்களுக்கு தேசிய நெடுச்சாலை வரையிலும் என நடத்தப்பட்டது.

இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

போட்டிகளில் வெற்றிபெறும் நபய்களுக்கு முதல் பரிசாக ரூ. 5, 000- வீதமும் இரண்டாம் பரிசாக ரூ. 3, 000- வீதமும், மூன்றாம் பரிசாக ரூ. 2, 000- வீதமும் நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் பெற்று வெற்றிபெறுப்வர்களுக்கு தலா ரூ. 1000 வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே காசோலையாக பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி