பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 416 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் வி. களத்தூர் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது 9 வயது கவினேஷ் என்ற மாற்றுத்திறனாளி மகனுக்கு காதொலிக் கருவி கேட்டு கோரிக்கை வைத்திருந்தார். அவரின் கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக காதொலிக்கருவி வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன்படிப்படையில், பத்து நிமிடங்களில் கவினேஷிற்கு இரண்டு காதுகளுக்கும் பொருத்தும் வகையில் காதொலிக்கருவிகள் வழங்கப்பட்டது. தனது குழந்தைக்கு காதொலிக் கருவி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கும், அரசிற்கும் அவரது தாய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.