பெரம்பலூர்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற, பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கக பணியாளர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழ்நாடு மாதில ஊரக வாழ்வாதார வட்டார இயக்க க மேலாளர்களுக்கு 15, 450-ல் இருந்து 30, 000 ரூபாயும், வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு 12, 360 இல் இருந்து 25 ஆயிரமாகவும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஊதிய உயர்வினை பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மாவட்ட அலகில் இருந்து விடுவிக்க வேண்டும், வருடத்திற்கு ஒருமுறை பணிபுதிப்பித்தல், பணிமதிப்பீடு செய்தல் ஆகியவற்றை கைவிட வேண்டும், பணியாளர்களின் எதிர்கால நலன் கருதி வருங்கால வைப்பு நிதி, காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், , பிற துறை சார்ந்த பணிகளை எங்களிடம் திணிப்பதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும், ஊதியத்திடும் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் மற்றும் சொந்த வட்டாரத்திலேயே பணிபுரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.