பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 30. 07. 2024 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 31. 07. 2024 அன்றும் பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையம் (தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அருகில்) முற்பகல் 10. 00 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 02. 00 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டியும் நடைபெறவுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 5000/-, இரண்டாம் பரிசாக ரூ. 3000/-, மூன்றாம் பரிசாக ரூ. 2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசுத் தொகை ரு. 2000/- வழங்கப்பெறும். முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் மாணவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பரிந்துரைக் கடிதம் இல்லாமல் வரும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.