புரட்டாசி 3-ம் வார சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகத்துடன், சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள்,
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் மேலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து, வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது இந்நிலையில்,
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி பெருமாள் கோவிலில்
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகைக்காக. கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மேலும் அக்டோபர் - 7ம்ஆம் தேதி இன்று புரட்டாசி 3ம் வார சனிக்கிழமை என்பதால்,
உற்சவர், பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு, திருமஞ்சனம் மஞ்சள், பால் தயிர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட
பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்திற்கு பின் மகா தீபாரதனை நடைபெற்றது, இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். இந்நிகழ்ச்சியில் அரங்காவளர் குழு உறுப்பினர்கள், உபயதாரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மற்றும் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.