அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கவுள்ளது

60பார்த்தது
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கவுள்ளது
பெரம்பலூர் மாவட்டம்
அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தகவல்.


மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சக்கட்ட வருமானம் ரூ. 2. 5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 4000/- கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை தமது வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்பிக்க வேண்டும். அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி