ரூ. 50. 82 லட்சம் மதிப்பில் ரொக்க பரிசுகளை கலெக்டர் வழங்கினார்

82பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தபட்ட முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், ரூ. 50. 82 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகளை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கிப் பாராட்டினார்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு மேலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய நிகழ்ச்சியில் குழுப் போட்டிகள் தனிநபர் போட்டிகள் என நடத்தப்பட்ட பல்வேறு வகையான போட்டிகளில் முதல்பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 3, 000ம், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 2, 000ம், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 1, 000ம் என மொத்தம் ரூ. 50. 82 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுக்கான காசோலைகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி