மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி

77பார்த்தது
பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செந்தொண்டர்
அணி வகுப்பு பேரணி நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 -வது அகில இந்திய மாநாடு மற்றும் பேரணி மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது , அதனை முன்னிட்டு இதனை எடுத்துறைக்கும் வகையில்
பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்,
கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் செந்தொண்டர் அணி வகுப்பு பேரணி நடைபெற்றது, பெரம்பலூர் ரோவர் வளைவு, சிக்னல் பகுதியில் இருந்து கிளப்பிய பேரணியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சாமி நடராஜன்
கொடியசைத்து துவக்கி வைத்தார், இதில் சிவப்பு வண்ண நிறத்தில் ஆடை அணிந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் 200 பேர் கலந்து கொண்டு அணிவகுத்து பேரணியாக சென்றனர், வெங்கடேசபுரம் மதனகோபாலபுரம் பாலக்கரை வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று பேரணி முடிவடைந்தது, பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர்கள் வீரவணக்கம் கோசமிட்டு, மாநாட்டை வலியுறுத்தி சென்றனர்

இந்நிகழ்ச்சியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி