பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட, குரும்பலூரில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 354 பயனாளிகளுக்கு ரூ. 2, 32, 28, 136 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.