வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதிகளில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பாக,
வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தி 21. 2. 2025 மாலை ஆறு மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்
வாரத்திற்கு 5 வேலை நாட்கள்
அமல்படுத்த வேண்டும்,
காலிப் பணி இடங்களை
நிரப்பிட வேண்டும், தற்காலிக கடைநிலை ஊழியர்களை
நிரந்தரம் செய்ய வேண்டும் ,
பொதுமக்களுக்கு போதுமான சேவையை
உறுதி செய்ய வேண்டும்,
போதுமான ஊழியர்களை
பணியமர்த்த வேண்டும்,
12 வது ஊதிய ஒப்பந்த நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,
அலுவலகத்தில் ஊழியர்கள் பாதுகாப்பை
உறுதி செய்ய வேண்டும்,
வங்கிகளை ஏமாற்றும் பெருமுதலாளிகள் வாரக் கடனை
வசூல் செய்ய வேண்டும்,
பணிக்கொடை சட்டத்தை
திருத்திட வேண்டும்,
ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்குகளை
குறைக்க கூடாது,
நிரந்தர பணிகளில் ஒப்பந்த முறைமையை
புகுத்த கூடாது
மேலும் கோரிக்கை மத்திய அரசுக்கு வலியுறுத்தி கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்
மார்ச் 24, 25ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி