பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

62பார்த்தது
பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படிஇன்று தலைமையாசிரியர் பூங்கோதை, உதவி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் Dr. வனிதா மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் தென்றல், (ONE STOP CENTER) Case Worker மேகலா, மற்றும் மீரா ஃபவுண்டேசன் நிறுவனர் ராஜா முகமது, ஆகியோர்கள் இணைந்து குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் மாநில பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்போம் என்றும் உறுதிமொழி எடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டபின் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி