மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம்

61பார்த்தது
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில், மாசி மகம் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம் அதனை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான மாசிமகம் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது,
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் சுவாமி சிம்ம வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், என பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி சுவாமி திருவீதி உலா நடைபெற்றதை
தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது இதில்,
கோவிலில் ஸ்ரீ ஆனந்தவல்லி, சமேத சந்திரசேகர் சுவாமி சிறப்பு அபிஷேக அலங்காரத்திற்கு பின் கோவில் இருந்து புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க , மங்கள இசை வாத்தியங்களுடன் திருத்தேர் திருவீதி உழா நடைபெற்றது, இதில் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை ஆகியோர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து திருத்தேரை இழுத்து சென்றனர். இதில் சிவ பக்தர்கள் வார வழிபாட்டு குழுவினர் சிவபுராணம், திருவாசகம் பாராணயம் செய்தனர், முக்கிய வீதி வழியாக சென்ற தேரோட்டத்தில், ஆங்காங்கே பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டுச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி