பெரம்பலூர்: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

54பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொண்டமாந்துறையில் அனைத்து கிராம மக்கள் சார்பாக, ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதி பெறுவதற்காக, தொண்டமாந்துறை ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் செல்வ பெருமாள் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். 

இதில் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமை அன்று, கிராம மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு திருவிழாவை நடத்த அனுமதி கேட்டும், அதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மனுவை பெற்ற ஆட்சியர் அரசின் ஜல்லிக்கட்டுக்கான விதிமுறைகளுடன், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர்.

தொடர்புடைய செய்தி