பெரம்பலூர் அருகேயுள்ள காரை ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பொது சுகாதார வளாகம் அமைத்து தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள காரை ஊராட்சிக்கு உட்பட்ட ராமலிங்க நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கழைக் கூத்தாடி இன மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 200 பேர் வசித்து வரும் நிலையில், இவர்களுக்கு பொது கழிவறை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், கொளக்காநத்தம் பகுதியில் நடைபெற்ற முகாமில் ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனர். ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவின் பேரில், ராமலிங்க நகர் பகுதியில் பொது இடம் சுத்தம் செய்யப்பட்டு இலவச கழிவறை கட்டப்பட உள்ளது என்று உறுதி அளிக்கப்பட்ட நிலையில், திடீரென அது ரத்து செய்யப்பட்டு விட்டதாக
அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களுக்கு பொது கழிவறை கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.