ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்க கோரி மனு

67பார்த்தது
லாடபுரம் கிராமத்தில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடந்த முறைகேட்டை கண்டித்தும் இதற்கு துணையான ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு..


பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் இதனைத் தொடர்ந்து தெரிவித்த போது லாடபுரம் கிராமத்தில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முறைகேடு செய்துள்ளதாகவும் 77-க்கும் மேற்பட்டவரிடம் வீடு கட்டாமல் அதற்கான தொகையை வங்கி கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை மீண்டும் மிரட்டி திரும்ப பெற்றுக் கொண்டுள்ளனர் எனவே இத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும் இதற்கான ஆவணத்துடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துறை சார்ந்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி