பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று 05. 10. 2024 -ம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி மற்றும் மோப்பநாய் படை பிரிவினருக்கு துப்பறியும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
மேலும், இந்த கவாத்து பயிற்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வோடு பணியாற்ற வேண்டும், உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறினார்கள்.
மேலும் இந்த கவாத்து பயிற்சியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தங்கபாண்டியன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.