இந்திய பள்ளிகள் விளையாட்டுக்குழுமம் எஸ். ஜி. எப். ஐ. நடத்திய 2024-25-ம் ஆண்டிற்குரிய 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடுவதற்காக மாநில அளவிலான வீரர்கள் தேர்வு போட்டிகள் காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சமீபத்தில் நடந்தது.
இந்த போட்டியில் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜே. பி. தன்வந்த் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகள் பெற்று மாநில அளவில் தேர்வு பெற்றார். தன்வந்த் வருகிற நவம்பர் மாதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்றுள்ளார்.
தேசிய போட்டியில் விளையாட தகுதி பெற்ற தன்வந்திற்கும், அவருக்கு பயிற்சி அளித்த பயிற்றுனருக்கும் பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரன், செயலாளர் அங்கையர்க்கண்ணி, துணைத்தலைவர் ஹரீஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பள்ளி உடற்கல்வி இயக்குனரும், கூடைப்பந்து பயிற்றுனருமான பிரேம்நாத், உடற்கல்வி ஆசிரியர்கள் அகிலாதேவி, வினோத் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.