மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

60பார்த்தது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இயற்கை மரணம் எய்திய மாற்றுத்திறனாளி த சுசீலா என்பரின் கணவர் ஞானசேகருக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலமாக வழங்கப்படும் ஈமசடங்கு உதவித்தொகை ரூ. 2000/- க்கான காசோலையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பயனாளி ஒருவருக்கு ரூ. 6, 690 மதிப்பிலான தையல் இயந்திரத்தினையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 03 பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசு அலுவலர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், 473 மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி