பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 10 தினங்களுக்கு முன்பு தொடங்கி இன்று தேரோட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர் திருவிழா குறித்து இரு சமூகத்தினர் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் திருவிழா நடத்தஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றதை தொடர்ந்து, தேர் திருவிழாவை நடத்தக்கூடாது என பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றொரு சமுகத்தினர் வேப்பந்தட்டை முழுவதும் கடையடைப்பு நடத்தினர், இதனால் வேப்பந்தட்டை முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வந்தது,
மதிய உணவிற்கு பிறகு நீதிமன்றத்தில் பதில் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீண்ட நேரமாக பதில் கிடைக்காததால் பொறுத்திருந்த பொதுமக்கள் தேரை சுற்றி போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை அகற்ற முற்பட்ட போது போலீஸாருக்கும் பொதுமக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
தொடர்ந்து, கிராம பொதுமக்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் தற்போது வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.