பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையினை சார் ஆட்சியர் கோகுல் (09.06.2025) தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் உயர்கல்வி பயில உதவி மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி 88072 62766 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.