டூவீலர் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

6738பார்த்தது
டூவீலர் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிர் இழப்பு, போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து மகன் காமராஜ் வயது. 47- இவர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மினரல் வாட்டர் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் வடக்கு மாதவி டாஸ்மாக் குடோன் அருகில், புறவழிச்சாலை பகுதியில் செல்லும் போது, தண்ணீர்பந்தலில் இருந்து துறையூர் சாலை நோக்கி வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே காமராஜ் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த காமாராஜ் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் பிணவறையில் வைத்து, லாரி ஓட்டுனரிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி