பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. மாநில இளைஞரணி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஒன்றியம், நகரம், பேரூராட்சிகளுக்கு புதிதாக நிர்வகிக்கப்பட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, கட்சி வரைமுறைகள் மற்றும் அமைப்பாளர்களுக்கான பணிகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்து பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, மற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஒன்றியங்கள், மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைகுடி, காடு ஆகிய பேரூராட்சி சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.