ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரின் தாயார் மறைவிற்கு எம்எல்ஏ அஞ்சலி

1768பார்த்தது
ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரின் தாயார் மறைவிற்கு எம்எல்ஏ அஞ்சலி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச்செயலாளரும் - ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என். கிருஷ்ணமூர்த்தி தாயார் என். லெட்சுமி அம்மாள்(94) உடல்நலக்குறைவால் காலமானார்! அவரது உடலுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச்செயலாளரும் - ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என். கிருஷ்ணமூர்த்தி மற்றும் என். மாதவன், என். ராமராஜ், கொளக்காநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் என். ராகவன் ஆகியோர்களின் தாயாரான என். லெட்சுமி அம்மாள்(94), என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த லெட்சுமி அம்மாள் உடலுக்கு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா. துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா. ப. பரமேஷ்குமார்,
ஒன்றிய கழக செயலாளர்கள் வீ. ஜெகதீசன், சோமு. மதியழகன்,
சி. ராஜேந்திரன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் எஸ். செல்வக்குமார்,
மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் ந. முத்துச்செல்வன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வ. சுப்ரமணியன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா. சிவா மற்றும் பி. அறிவுச்செல்வன், சிதம்பரம், வாலிகண்டபுரம் அய்யாக்கண்ணு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி