அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடனான கூட்டம்

59பார்த்தது
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, 1951, வாக்காளர் பதிவு சட்டம் 1960, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961 மற்றும் நடைமுறைகள் கையேடுகள், விதிமுறை புத்தகங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிகளுக்கு விளக்கும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, 1951, வாக்காளர் பதிவு சட்டம் 1960, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961 மற்றும் நடைமுறைகள் கையேடுகள், விதிமுறை புத்தகங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அனைத்து தகவல்களும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளப் பக்கத்தில் உள்ளது. அதன் இணைப்புகள் (links) உங்கள் அனைவருக்கும் பகிரப்படும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் 1 மற்றும் 2க்கான பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் வழங்கிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147-பெரம்பலூர் (தனி) மற்றும் 148-குன்னம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் அதை மனுக்களாக வழங்கிட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி