மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அக்டோபர் ஒன்பதாம் தேதி இன்று மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சி ஐ டி யு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்டத் தலைவர் கொளஞ்சி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் சசிகலா, ராணி, ராஜேஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில துணைச் செயலாளர் செல்வி மற்றும் மாவட்ட பொருளாளர் வேணி ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள், Citu மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாவட்ட தலைவர் ரங்கநாதன், பொருளாளர் ரெங்கராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் வழங்கிட வேண்டும், ஊக்கத்தொகை 2000 ரூபாய் அனைவருக்கும் காலதாமதம் இன்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும், பணி நேரம், பணிகளை வரையறை செய்திட வேண்டும், ஆன்லைன் தொடர்பான பணிகளுக்கு கைபேசி, பேட்டரி, செலவுகளை, வழங்கிட வேண்டும், சீருடை, அடையாள அட்டை, ரெயின் கோட், ஸ்டேஷனரி பொருட்கள் வழங்கிட வேண்டும், சம்பளத்தை பிரதி மாதம் ஐந்தாம் தேதிகுள் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.