பெரம்பலூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

79பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளருமான சாமி நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, அகஸ்டின், கலையரசி, ரெங்கநாதன், கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி