பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபு ரீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நேற்று நடந்தது. நாயன்மார்கள் தனிசன்னதியில் எழுந்தருளியுள்ள மாணிக்கவாசகர் மற்றும் திருஞான சம்பந்தர், அப்பர் என்ற திருநாவுக்கரசர், சுந்தரர் உள்ளிட்ட திருமேனிகளுக்கு பால், தயிர், பழவகைகள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவி யங்களைக்கொண்டு அபிஷேகங்களும், அதனைத்தொடர்ந்து அலங்காரம், மகாதீபாராதனையும் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் நடத்தினார். நிகழ்ச்சியில் விழா ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம், முன்னாள் அறங் காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் வாரவழிபாட்டுக்குழுவினர், சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு சிவபுராணம், திருவெம்பாவை, திருப்பள்ளிஎழுச்சி உள்ளிட்ட திருமுறை களை பாராயணம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் கோவிந்தராஜன் மேற்பார்வை யில், வாரவழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்