தனியார் பள்ளியில் கார்கில் நினைவு நாள் நிகழ்ச்சி

70பார்த்தது
தனியார் பள்ளியில் கார்கில் நினைவு நாள் நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கார்கில் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள்.

பின்னர் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி கல்வியும் காவலும்'* என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவ மாணவிகளிடம் போதை பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வுகள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் முக்கியமாக தற்கொலைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் மாணவ மாணவிகளிடம் காவல்துறையில் இயங்கும் விரல்ரேகை பிரிவு, மோப்பநாய்ப்படை பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு ஆகிய பிரிவுகள் குறித்தும் அப்பிரிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி