பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கீழமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைக் கூத்தாடி இன மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் இதனை தொடர்ந்து தெரிவித்த போது, தங்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக குறவர் என்ற அடிப்படிமையில் எம் பி சி ஜாதி சான்றிதழ் உள்ளது. இதில் தங்களுக்கு தேவையான அரசு சலுகை ஏதும் இல்லாததால் கலை கூத்தாடி வேலை செய்து வரும் அரசு சலுகைகளை பெரும் வகையில் தங்களுக்கு மலைக்குறவர் என்ற அடிப்படையில் எஸ்டி ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் பலமுறை மனு கொடுத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் தங்களுக்கு மனு கொடுத்தால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கும், அரசு சலுகைகள் பெறுவதற்கு எதுவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.