பெரம்பலூர் எளம்பலூர் சாலையல் உள்ள ரோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்து வருபவர்,
கபாலிஷ்வரன் 43,
இவரது
மனைவி
தேன்மொழி 35,
இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர் இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி தேன்மொழி தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர் இந்நிலையில் கபாலீஸ்வரர் வீட்டில் இருந்து உள்ள நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனது பழக்கடைக்கு சென்றுள்ளார் இந்நிலையில் நேற்று இரவு தேன்மொழி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பின்பக்க கதவு, பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருள், 7000 பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது இது குறித்து பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து திருடி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இதே போன்று நேற்று இரவு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள பிரம்மா நகர் பகுதியில், குடியிருக்கும் மணி - 58, என்பவரது பூட்டி இருந்த வீட்டின், பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர், இது குறித்தும் போலீசார் விசாரணை செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.