பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் காவல்துறையின் சார்பாக குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகள் முறையை ஒழிக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிறப்பு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 04. 10. 2024 -ம் தேதி சார்பு நீதிபதி மகேந்திர வர்மா (மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்) உதவி ஆணையர் மூர்த்தி (தொழிலாளர் நலத்துறை) தொழிலாளர் நலதுறை ஆய்வாளர் ராணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து மாவட்ட குழந்தைகள் நல அலகு கவுன்சிலர் மகேஸ்வரி மற்றும் NGO மீரா பவுண்டேஷன் ஆகியோர்கள் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் மற்றும் ஈச்சங்காடு கிராமங்களில் உள்ள செங்கல் சூலைகளில் குழந்தை தொழிலாளர்கள் அல்லது கொத்தடிமை முறையில் எவரேனும் பணி புரிகின்றனரா என்று சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.