காரை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

65பார்த்தது
காரை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
காரை ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் காரை புதுக்குறிச்சி மலையப்பநகர் ராமலிங்க நகர் மற்றும் சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த கிராம சபை கூட்டத்தில் கிராமத்தில் உள்ள நீர் நிலைகள் பாதுகாப்பு ஜல்ஜீவன் மிஷன் வீடு தோறும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் இக்கூட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு எழுத்தறிவு திட்டத்தின் மூலம் கிராமப் பகுதியில் உள்ள எழுதப் படிக்க தெரியாத 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்து மற்றும் படிப்பதற்கான பயிற்சி வழங்கி வருவதாக கூறினார். மேலும் 100% எழுத்தறிவு பெற்ற கிராமமாக 2025-க்குள் மாற்றி காட்டுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 

முத்தமிழ்செல்வன் AEC அறக்கட்டளை மூலம் ராமலிங்க நகர் பகுதியில் இருந்து வந்த கலைக்கூத்தாடிகள் இன மக்கள் தங்களுக்கு குடியிருக்க வீடு மற்றும் பொது கழிவறை வளாகம் மற்றும் சாக்கடை அமைத்து தர கோரி மனு கொடுத்தனர். இறுதியாக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கிராம சபை கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

தொடர்புடைய செய்தி