பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி
இயங்கி வருகிறது, இப்பள்ளியில் ஆய்வக பயிற்றுனராக கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியபிரியா 28,. ஆய்வக பயிற்றுநராக பணிபுரிந்து வருகிறார், மேலும் இதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும்
லாடபுரம் கிராமத்தை சேர்ந்த,
விமல்ராஜ் என்பவர் சத்திய பிரியாவிற்க்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார், புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அரசு பள்ளி ஆசிரியர் விமல்ராஜை இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.