பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசுகலைக்கல்லூரி கௌரவவிரிவுரையாளர்கள், மணிநேர விரிவுரையாளர்கள் நிலுவையில் உள்ள 7 மாத சம்பளத்தை வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
விரிவுரையாளர்களின் போராட்டத்தை அரசு கவனத்தில் கொண்டு சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும்.
கல்லூரியில் அடிப்படை வசதிகளான கழிவறைகள். உணவருந்தும் கூடம் விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை மேம்படுத்திதர வேண்டும். கல்லூரியின் மைதானத்தை சீரமைத்து தர வேண்டும்.
கல்லூரியில் ஒப்புதல் வழங்காத பாடப்பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சாலைமறியல் செய்தநிலையில் மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தங்களுக்கு வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளன இன்னும் ஒரு மாதமே தேர்வு உள்ள நிலையில் பல்கலைக்கழகமும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று மாணவர்களும் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.