ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

52பார்த்தது
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூபாய் ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆட்டு சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெறும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு முதல் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை நடைபெறும் இந்த ஆட்டு சந்தையில், பெரம்பலூர் மட்டுமின்ட்றி அரியலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆடு வியாபாரிகள் வந்து விவசாயிகளிடம் இருந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டும் சிறப்பு விற்பனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் பல்லாயிரக்கணகில், போயர், தலைச்சேரி, மேச்சேரி, சென்னை சிவப்பு, ராமநாதபுரம் வெள்ளை, வேம்பூர், திருச்சி கருப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான வகையில் வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் என விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த நிலையில்,
இந்த ஆடுகள்
இன்று ரூபாய் ஒரு கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றதாக ஆட்டு சந்தை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் ஆடு வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி