பாமக மற்றும் வன்னியர் சங்கம் கொடியேற்று விழா நிகழ்ச்சி

276பார்த்தது
பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் ஊராட்சியில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.


பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் ஊராட்சி மேற்கு மலை அடிவாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்று விழா நிகழ்ச்சி, ' பெரம்பலூர் வடக்கு வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளர்களாக
மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு
வன்னியர் சங்கத்தின் கொடியை மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி ஏற்றினார். பாட்டாளி மக்கள் கட்சி கொடியைமாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஏற்றினார் அதனை தொடர்ந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது,
மேலும் நிகழ்ச்சியில் மாற்று கட்சியில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர்.

இந் நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தங்கதுரை மாவட்ட இளைஞர் அணி தலைவர். பெரம்பலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மற்றும் கவுல் பாளையம் கிராம பொதுமக்கள் மற்றும் மேற்கு மலை அடிவாரத்தைச் சேர்ந்த பாமக இளைஞர் லட்சுமணன், சிவா, சதீஷ் கோபி, கார்த்தி, ரமேஷ், மற்றும் பாமக கிளை ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள்பலர்கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி