பூலாம்பாடியில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் திருவிழா

80பார்த்தது
பூலாம்பாடியில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் திருவிழா
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம். பிரசித்த பெற்ற இவ்ஆலயத்தில் தீ மிதி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், நாளை 12 ந்தேதிஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ அர்ஜுனன் திருக்கல்யாணம் நிகழ்வும் நாளை மறுநாள் நாட்டுக்கல் மனக்காட்டிலிருந்து பால் குடம், அக்னி சட்டி எடுத்தல், அலகுகுத்துதல் நிகழ்வும், வரும் 14ந்தேதி நல்ல தண்ணீர் குளத்திலிருந்து அருளோடு புறப்பட்டுவந்து தீ மிதித்தல் நிகழ்வும். 15ந்தேதி ஊரணி பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நேற்று சீர் எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மேளதாளம் முழங்க சீர் எடுத்து வந்து திரெளபதி அம்மனை வழிபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் கிராம பொதுமக்கள் மற்றும் டத்தோ பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி