பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

74பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இ௹ர் கிராமத்தில், சிப்காட் அமைப்பதற்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, இந்நிலையில் இரூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலம் 85 ஏக்கர் , சிப்காட்டிற்காக எடுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது ஆகவே தங்களது விவசாய நிலங்களை கையைபடுத்த கூடாது என தெரிவித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர், அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் நூதன முறையில் கோவணம் அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். முன்பு விவசாயிகளை அழைத்து சென்றனர், தொடர்ந்து அய்யாக்கண்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வந்து விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார் அப்போது, விவசாயிகள் தங்கள் நிலங்கள் எடுப்பதற்கான ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் ஆட்சேபனை தெரிவித்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி