மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

67பார்த்தது
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு - மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் அவுட் சோர்சிங் முறையில் ஆட்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும். மின்வா ரியத்தில் கள உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக் கீட்டாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி மின்பொறியாளர் உதவி வரைவாளர் உள்பட காலியாக உள்ள 33 ஆயிரம் பணியிடங்களையும்,
இதர பதவிகளில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங் களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ. 5 லட் சத்தை மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்கிடும் அரசாணை வெளியிடப்பட்டு 3 ஆண்டு காலமாகி விட்ட தால், உடனடியாக செயல்படுத்த வேண்டும். 1. 12. 2023 முதல் மின் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங் குவதற்காக குழுவை அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட மின்வாரிய பணியாளர்கள் மற்றும் மின்பொறியளர்களுக்கான 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இதில் பெரம்பலூரில் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி