பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணைப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து, பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், எழுத்தாளர் மதிமாறன், பேசசாளர் காருண்யா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் இந்தி திணிப்பு, தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் மற்றும் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்திற்கு இழைக்கப்பட உள்ள அநீதி குறித்து பேசினர். கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக இளைஞர் அணியினர் மத்திய அரசை கண்டித்து பேரணி நடத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சேர்ந்த நிர்வாகிகள், 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.