பெரம்பலூரில் திமுக உறுப்பினர் அட்டை வழங்க நிகழ்ச்சி நடந்தது

85பார்த்தது
பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில், பெரம்பலூர் ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் திமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, திமுக பெரம்பலூர் ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார் கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே. என். அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள், இதில் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு அதிகப்படியான வாக்களித்து கே. என். அருண்நேருவை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்து, வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர், தொடர்ந்து பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட திமுக கிளைக் கழக நிர்வாகிகளிடம் திமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி