கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனை

75பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையினை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புதிய ரக புடவையினை கலெக்டர் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பணம் செலுத்தி வாங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. தற்போது 2024ஆம் ஆண்டிற்கான தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 34. 00 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோ-ஆப்டெக்ஸ்ஸில் மின் வணிக விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் www. cooptex. gov. in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப இரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, அவர்களின் உழைப்புக்கு உரிய மரியாதையினை செலுத்திடும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் துணிகளை வாங்கி அவர்களுக்கு உதவிட வேண்டும். அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அதிக அளவில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் துணி ரகங்களை வாங்கும்போது, நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெருகும். எனவே, அனைவரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவீத சலுகையுடன் துணிகளை வாங்கிப் பயன்பெற வேண்டும்.
என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி