காதிகிராப்ட் அங்காடியில் தீபாவளி கதர் தள்ளுபடி விற்பனை

62பார்த்தது
தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 156 வது பிறந்த நாளை முன்னிட்டு,
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று (02. 10. 2024) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் காதிகிராப்ட் அங்காடியில் அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், அனைவரும் கதர் கிராம தொழில்வாரியத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்கி பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர்மன்றத்தலைவர் திருமதி அம்பிகா ராஜேந்திரன், பெரய்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி மீனாஅண்ணாதுரை, நகர்மன்றத் துணைத்தலைவர் திரு. ஆதவன், நகராட்சி ஆணையாளர் திரு. ராமர், காதிகிராப்ட் பெரம்பலூர் கிளை மேலாளர் திரு. இளங்கோ, பெரம்பலூர் வட்டாட்சியர் திரு. சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி