சோதனைச் சாவடிகள் அமைத்து மாவட்ட காவல்துறையினர் சோதனை

82பார்த்தது
சோதனைச் சாவடிகள் அமைத்து மாவட்ட காவல்துறையினர் சோதனை
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 5 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் உத்தரவின்படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த வாகன சோதனையானது இரவு நேரங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான திருமாந்துறை, ஊட்டத்தூர், அடைக்கம்பட்டி, அல்லிநகரம், உடும்பியம் ஆகிய 5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி